கனவும் காதலும்
Sunday, July 17, 2011 | Labels: கனவும் காதலும் | 0 comments |
கனவும் காதலும்
தூக்கம் வாங்கிக்கொண்டு கணவுகள் தந்தாய்.
கணவுகளை எடுத்துக்கொண்டு காதல் தந்தாய்.
காதலை தந்துவிட்டு இதயத்தை எடுத்துக்கொண்டாய்.
தற்போது என்னிடம் இருப்பது உன் நினைவுகள் மட்டுமே.
ஒரு முறை தான் உன்னை கடந்து சென்றேன்.
கவிஞ்ஞநாகிவிட்டேன் .
உன் கண்களால் என்னை கைது செய்கிறாய்,
உன் இதழ்களால் என் இதழ்களை காதல் மொழி மாற்றம் செய்கிறாய்.
உன் ஸ்பரிசத்தால் என்னை உனதாக்கினாய்.
காற்றை பிரித்து சுவாசம் தருகிறாய்…
நிலவை உறுக்கி வெளிச்சம் தருகிறாய்.
பூக்கள் கொண்டு வாசம் தருகிறாய்
உன் இதயம் கொண்டு ஏன் எனைக்கொள்கிறாய்?
உன் விழிகளுக்கு விடை கூற யாரால் முடியும்!
தேனிக்கள் ஒரு நாள் சோகமாக இருந்தன. நான் காரணம் கேட்டபோது
எந்த பூவிலும் தேன் இல்லை, அதனால் எங்களால் தேன் சேகரிக்க முடியவில்லை என வருத்தப்பட்டன. நீ எங்காவது தேன் உள்ள பூவை பார்த்தால் சொல்கிறாயா ? என்றன. நான் உன் முகவரி குடுத்து அனுப்பி வைத்தேன். தேனிக்களுக்காக கொஞ்சம் சிரியேன், நீ இதழ் விரித்து சிரிக்கும் போது அதன் ஓரமாக வடியும் தேனை அவைகளும் கொஞ்சம் குடிக்கட்டும்.
ஊறூக்குள் நீ வந்து விட்டாய் என்று அறிவித்தது ..
உன் வீட்டு வாசலில் நி போட்டு வைத்த கோலம்.
ஊர் உறங்கிய பிறகு உன் வீடிருக்கும் தெருவில் நகர் வலம் வருகிறேன் நான்.
நீ நடந்து சென்று வந்த உன் காலடிச்சுவடுகளை காற்று தூக்கிச்செல்லுமுன், கண்டுவிடமேண்டுமென்று..
நாம் முத்தமிடும் போது கேட்கும் சப்தங்கள் எங்கிருந்து வருகின்றன?
கொடுக்கும் உதட்டில் இருந்தா? இல்லை பெற்றுக்கொள்ளும் உதட்டில் இருந்தா?
உன் கைப்பேசியில் நீ எனக்கு கொடுத்த முத்தத்தால்
ஈரமாகிப்போனது என் கைப்பேசியின் முகப்பு.
வெட்கங்கள் அறியாது, நம் காதல் பாஷைகள்,
ஊடல்கள் குறையாது நம் காதல் வாழ்வினில்,
சட்டென்று முடியாது நம் காதல் யாத்திரை.
பெண்னென்ற பூ வா நீ.. ஜில்லென்ற குளிரா நீ...
சட்டென்று எனை நனைக்கும் விண் தூரல் மழையா நீ!
என் நெஞ்சிலே உன் ஞாபகம் ஊஞ்சலாய் எனை ஆட்டுதே!
நான் பார்க்கவும், நீ பூக்கவும் மெளனங்கள் மொழியானதே!
என்றும் அன்புடன்
அ. விமல்